விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Arts Network Asia (ANA) 2012 மானியங்களுக்கான திட்டம்


ஆசிய கலைஞர்கள், பண்பாட்டுப் பணியாளர்கள், கலை ஆர்வலர்கள், மற்றும் ஆசியாவிலுள்ள கலைச் சமூகத்தவர்கள் ஆகியோரை ANA 2012 மானிய திட்டத்தில் சேர விண்ணப்பிப்பதற்கு Arts Network Asia (ANA) அழைக்க விரும்புகிறது.


ஆசியாவில் வாழ்ந்து வருகின்ற ஆசிய கலைஞர்களின் திட்டங்கள், ஆசிய கலைஞர்கள் மற்றும் கலைச் சமூகங்களால் ஆசியாவில் துவக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மற்றும் தென்கிழக்காசியாவை மையப்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றிற்கு ANA நிறுவனம் ஆதரவளிக்கிறது. ஆசியாவில் இருக்கிற பல்வேறு பண்பாட்டினர் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றிற்கிடையே பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றைத் தூண்டும் திட்டங்களுக்கும் ANA ஊக்கமளிக்கிறது. மரபுகளுடனான தொடர்புகளையும் உள்ளடக்கிய ஆசியாவின் தற்போதைய அனுபவங்களில் நாங்கள் ஆர்வம் கொண்டுள்ளோம். எனவே, நகர்ப்புற வெளிப்பாடுகள், தற்போதைய கலைகள், தற்போதைய மற்றும் மரபு வழிப்பட்ட கலைகளுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் மரபு வழிப்பட்ட கலைகளுடனான சந்திப்புகள், ஆசிய நாடுகளிலுள்ள பல்வேறு பண்பாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகியவற்றையும் உள்ளூர்-வட்டார-உலகத் திறமைகளின் பங்களிப்புகளையும் ANA வரவேற்கிறது.

ெரிவு செய்வதற்கான அளவுகோல்களாக ANA கீழ்க்கண்டவற்றைக் கொண்டுள்ளது:


ஒவ்வொரு திட்டத்திற்கும் ANA வின் நிதி உதவி US$1,500 – 7,500 அளவில் உள்ளது; மேலும் இவ்வுதவி தற்போதுள்ள அல்லது புதிய திட்டங்களுக்கும் பொருந்தும். கடந்த காலத்தில் நிகழ்ந்த ANA ஆதரவு பெற்ற கடந்த திட்டங்களுக்கான பின்தொடர் முன்மொழிவுகளுக்கும் இடமுண்டு.

திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான முக்கிய செயல்முறை

ஒரு-A4 பக்கத்தில் அமைந்த முன்மொழிவை, 200 சொற்களில் அமைந்த வாழ்க்கை/விவரக் குறிப்புடன் PDF வடிவத்தில் இணைத்து 30 நவம்பர் 2011 முதல் 31 டிசம்பர் 2011 தேதிக்குள் ANA இணையதளம் (www.artsnetworkasia.org)வழியே அனுப்ப வேண்டும். இதனை ஆங்கிலம் அல்லது நீங்கள் விரும்பும் மொழி ஒன்றில் (சீனம், இந்தோநேசியன், ஜப்பானியம், கெமெர், கொரியன், லாவோ, சிங்களம், தமிழ், தாய், மற்றும் வியட்நாம்) எழுதலாம். ஒரு-A4 பக்க முன்மொழிவில் திட்டத்தின் உள்ளடக்கம், தத்துவம் மற்றும் திட்டத்தின் நோக்கம் ஆகியன அடங்கியிருக்க வேண்டும். ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பத்தை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவார்.

இணையம் வாயிலாக விண்ணப்பம் அனுப்புவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அல்லது உங்கள் நகரத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக இணையத்தில் விண்ணப்பம் அனுப்ப இயலவில்லை எனில், தயவு செய்து ana.directory@gmail.com அல்லது தொலைநகலி +65-6737-7013 ஐ தொடர்பு கொள்க.

வலையமைப்புகளின் நோக்கங்கள் மற்றும் நிபந்தனைகளுக்குத் தகுதி வாய்ந்த முன்மொழிவாளர்கள் அனைவரையும் முன்மொழிவை அனுப்பி வைக்குமாறு ANA கேட்டுக் கொள்ளும். திட்டங்களின் நிதிநிலை விவரங்களுடன் கூடிய முழுமையான முன்மொழிவுகளை 29 பிப்ரவரி 2012 அல்லது அதற்கு முன்னர் அனுப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 31 மார்ச் 2012 தேதியன்று வெற்றிபெற்ற விண்ணப்பங்கள் பற்றி தெரிவிக்கப்படும்.

கடந்தகால ANA ஆதரவு பெற்ற திட்டங்களை அதன் இணையதளத்தில் காணலாம், இவற்றை குறிப்புக்காக மீள்பார்வை செய்யலாம்.

ஆசியாவிற்குள்ளே கூட்டுறவை ஊக்குவிப்பதற்காக, விண்ணப்பம் கிடைத்தவுடன் முன்மொழிவாளர் (தனிப்பட்டவர்/குழு/அமைப்பு) மற்றும் அவரது தொடர்புத் தகவல்களை (மின் அஞ்சல் முகவரி, இணையதளம், முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகலி எண்கள்) மேலும் சுருக்கமான குறிப்புரையுடன் ANA இணையதளத்தில் சேர்க்கும்.

உங்கள் நாட்டில் ANA தோழமைக் குழுக்கள் வசித்து வந்தால், வழிகாட்டுதல் அல்லது உதவிக்காக அவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். தோழமைக் குழுவினரின் பெயர்கள் மற்றும் தொடர்புகள் பற்றிய விவரங்கள் ANA இணையதளத்தில் கிடைக்கும்.

ேற்கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு நீங்கள் ANA வின் இயக்குநர் Tay Tong அவர்களை என்ற மின்னஞ்சலில் அல்லது தொலைநகலி எண் +65-6737-7013 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்

 

1999 ல் நிறுவனர் ஒங் கெங் சென் மற்றும் TheatreWorks (சிங்கப்பூர்) ஆல் நிறுவப்பட்ட Arts Network Asia (ANA) ஆசியாவின் தனிப்பட்ட கலைஞர்கள், பண்பாட்டுப் பணியாளர்கள் மற்றும் கலை ஆர்வலர்களை உள்ளடக்கிய வட்டார கலை நிறுவனமாகும். மானியம் வழங்குவதோடு, நாடுகளுக்கிடையே பலதரப்பட்ட துறைகளில் செயலாற்றுவதோடு ஆசியாவினுள் கலைகளுக்கிடையிலான ஒத்துழைப்பு, உரையாடல், பரிமாற்றம் மற்றும் மேலாளர் மற்றும் நிர்வகிப்பு திறன்களை உருவாக்குகிறது. பரஸ்பர மரியாதை காரணத்தால் தனித்துவம் வாய்ந்த அர்த்தமுள்ள ஒத்துழைப்பு தத்துவத்தை முதன்மையாகக் கொண்டு ANA ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவில் தோற்றுவிக்கப்பட்டு ஆசிய கலைஞர்கள் மற்றும் கலை சமூகத்தினர்களால் ஒன்றிணைந்து நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இது இயங்கி வருகிறது.

தனது வருடாந்திர திட்ட மானியங்கள் வாயிலாக ஆசியாவினுள் கலைகளுக்கிடையிலான கூட்டுறவு மற்றும் பரிமாற்றத்தை ANA ஊக்குவித்து ஆதரவளிக்கிறது. ஆசியா முழுவதும் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற 9-பேர் அடங்கிய தோழமைக் குழு ஒன்று இதனை முடிவு செய்கிறது. மேலும், பயணத்துக்கான மானியங்களை ANA வழங்கி உள்ளூர் மற்றும் வட்டார சமூகங்களுக்கிடையே ஒத்துழைப்பு, ஆய்வு, கூட்டுறவு மற்றும் உரையாடல்களை ஏற்படுத்துகிறது. இந்த மானியம், குறிப்பாக ஆசியாவினுள் பயணம் செய்கின்ற ஆசிய கலைஞர்கள் மற்றும் பண்பாட்டு பணியாளர்களுக்காகும். இந்தப் பயண மானியத்துக்கான விண்ணப்பம் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

ANA வுக்கான ஆதரவை The Ford Foundation வழங்குகிறது.

மேலதிக தகவல்களுக்கு, தயவு செய்து www.artsnetworkasia.org க்கு வருகை புரியவும்.